| ADDED : ஜூலை 22, 2024 11:40 PM
காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் ஏனாத்துாரில், 1991ல் துவக்கப்பட்ட சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், ப்ரணவ் - முன்னாள் மாணவர் பேரவை' சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட முன்னாள் மாணவர் சந்திப்பு கூட்டம் நடந்தது.இதில், 1991 முதல் கடந்த கல்வியாண்டு வரை, கல்லுாரியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் 2,000க்கும் மேற்பட்டோர் பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும், இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆர்வத்துடன் வந்து பங்கேற்றனர்.முன்னாள் மாணவர்கள் கல்லுாரிக்கும், இந்நாள் மாணவர்களுக்கும் எவ்வாறு உதவி செய்ய முடியும்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.இதில், பங்கேற்ற முன்னாள் மாணவர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். தற்போது கல்லுாரியில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, மரக்கன்று வழங்கினர்.கல்லுாரி முதல்வர் கலைராம வெங்கடேசன், முன்னாள் மாணவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கினார். முன்னதாக கலைமாமணி டாக்டர் எம்.லலிதா, எம்.நந்தினி வயலின் இசை கச்சேரி நடந்தது.தொடர்ந்து தொல்லியல், கல்வெட்டியல், புகைப்பட ஓவிய கண்காட்சியை பார்வையிட்டும், குழு புகைப்படம் எடுத்தும் பழைய நினைவுகளை பகிர்ந்தும் முன்னாள் மாணவர்கள் மகிழ்ந்தனர்.