மேலும் செய்திகள்
சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம்
8 hour(s) ago
மின்விளக்கு வசதி இல்லாத கருங்குட்டை சுடுகாடு
8 hour(s) ago
தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் காஞ்சியில் விபத்து அபாயம்
8 hour(s) ago
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், சிறுமையிலுார் ஊராட்சிக்கு உட்பட்டது சித்தாலப்பாக்கம் கிராமம். இக்கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி எதிரே, பல ஆண்டுகளுக்கு முன் கட்டிய கட்டடத்தில் அங்கன்வாடி மையம் இயங்கி வந்தது.இந்த அங்கன்வாடி மையத்திற்கான கட்டடம், மிகவும் சிதிலம் அடைந்ததை அடுத்து, மாவட்ட நிர்வாக உத்தரவின்படி, இரண்டு ஆண்டுக்கு முன் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது.அதையடுத்து, இதுவரை இப்பகுதியில் அங்கன்வாடிக்கு புதிய கட்டட வசதி ஏற்படுத்தாமல் உள்ளது. இதனால், சித்தாலப்பாக்கத்தில் தனிநபர் ஒருவருக்கு சொந்தமான கட்டடத்தில் தற்போது அங்கன்வாடி மையம் வாடகைக்கு இயக்கப்படுகிறது.வாடகை கட்டடத்தில் போதுமான இடவசதி இல்லாமலும், மழை நேரங்களில் வகுப்பறையில் நீர் சொட்டும் நிலையும் உள்ளது.இதனால், மழைக்காலங்களில் அங்கன்வாடி மையத்திற்கு தங்களது குழந்தைகளை அனுப்ப பெற்றோர் தயக்கம் காட்டுகின்றனர்.எனவே, சித்தாலப்பாக்கத்தில் அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டட வசதி ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குழந்தைகளின் பெற்றோர் மற்றும் அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago