உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ராம்சர் சதுப்பு நிலங்களில் சிலைகள் கரைக்க தடை

ராம்சர் சதுப்பு நிலங்களில் சிலைகள் கரைக்க தடை

சென்னை: விநாயகர் சதுர்த்தி, இன்று கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகையின்போது விதவிதமான வடிவங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடும் மக்கள், அவற்றை நீர்நிலைகள், கடலில் கரைப்பது வழக்கம்.ரசாயனம் கலந்துசெய்யப்படும் சிலை களால் சுற்றுச்சூழல் மாசுபடுவதால், விநாயகர்சிலைகளை கரைக்க, மாசு கட்டுப்பாட்டு வாரியம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சிலை தயாரிப்பு சம்பந்தமாக வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது.இது தொடர்பான வழக்கை விசாரித்த தென் மண்டல பசுமை தீர்ப்பாயம், 'சூழலியல்முக்கியத்துவம் வாய்ந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலம் உள்ளிட்ட 18 ராம்சர் தளங்கள் மற்றும்பழவேற்காடு ஏரி, கழிமுகங்களில் விநாயகர் சிலைகளை கரைக்கக்கூடாது' என உத்தரவிட்டது.மேலும், அந்தந்த மாவட்ட நிர்வாகங்களுடன், சம்பந்தப்பட்ட நீர்நிலைகள் அமைந்துள்ள மாவட்டங்களின் சுற்றுச்சூழல் பொறியாளர்கள்இணைந்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்என்றும் வாரியம் உத்தர விடப்பட்டுள்ளது.

எங்கெங்கு கரைக்கக் கூடாது

தமிழகத்தில் மன்னார் வளைகுடா, சென்னை பள்ளிக்கரணை, கடலுார் பிச்சாவரம், கன்னியாகுமரி சுசீந்திரம், வேம்பனுார் சதுப்பு நிலங்கள், செங்கல்பட்டு வேடந்தாங்கல் மற்றும் கரிகிலி, நாகை வேதாரண்யம், ஈரோடு வெள்ளோடு,திருவாரூர் உதயமார்த்தாண்டபுரம் மற்றும் வடுவூர், நெல்லை கூந்தன்குளம், ராமநாதபுரம்காஞ்சிரங்குளம் மற்றும் சித்திரங்குடி, அரியலுார்கரைவெட்டி, திருப்பூர் நஞ்சராயன்,விழுப்புரம் கழுவேலி பறவைகள் சரணாலயங்கள், நீலகிரி லாங்வுட் காப்புக்காடுகள் மற்றும்திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு ஏரியிலும் விநாயகர் சிலைகளை கரைக்க, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்துள்ளது.

சென்னையில் 1,519 சிலைகள்

சென்னை முழுதும் 1,519 விநாயகர் சிலைகள் வைக்க, போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர். விதிக்கப்பட்ட நிபந்தனைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் எனவும், சிலை வைத்துள்ளோரிடம் அறிவுறுத்தி உள்ளனர். அதேபோல், ஆவடி காவல் எல்லையில் 286; செங்குன்றம் காவல் எல்லையில் 217 என, மொத்தம் 503 விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி தரப்பட்டுள்ளது.சென்னை மற்றும் ஆவடி பகுதிகளில், பாதுகாப்பு பணிக்காக 13,000 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ