உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கழிவுநீர் தொட்டியில் மிதந்த வாலிபர் உடல்

கழிவுநீர் தொட்டியில் மிதந்த வாலிபர் உடல்

சென்னை: மதுரவாயலில், கழிவுநீர் தொட்டியில் மிதந்த வாலிபரின் உடலை மீட்டு, போலீசார் விசாரிக்கின்றனர்.குடிநீர் வாரியம் சார்பில், மதுரவாயல் பெருமாள் கோவில் தெருவில், பாதாள சாக்கடை கட்டும் பணி நடக்கிறது. கழிவு நீரை வெளியேற்ற, 'பம்பிங்ஸ்டேஷன்'கள் கட்டப்படுகின்றன.அந்த வகையில், பெருமாள் கோவில் தெருவில், புதிதாக 20 அடி அகலம், 8 அடி ஆழத்திற்கு தொட்டி ஒன்று கட்டப்பட்டுள்ளது.இந்த தொட்டிக்கு மூடி இல்லாத நிலையில், பாதி அளவுக்கு இரும்புத்தகடு போடப்பட்டுள்ளது.இந்த தொட்டி அருகே, அப்பகுதியைச் சேர்ந்தவர்கள், இரவு நேரத்தில் மது குடித்து வந்துள்ளனர்.நேற்று காலை, தொட்டியில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியுள்ளது. அப்பகுதிவாசிகள் சென்று பார்த்த போது, தண்ணீரில் அழுகிய நிலையில் வாலிபர் உடல் மிதந்துள்ளது. இதுகுறித்து, மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.சம்பவ இடத்திற்கு போலீசார், தீயணைப்பு வீரர்கள் வந்து, வாலிபரின் உடலை மீட்டுள்ளனர்.போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இறந்து கிடந்த வாலிபர், அதே பகுதியைச் சேர்ந்த சரண்ராஜ்,30, என்பதும், வானகரம் மீன் அங்காடியில் சுமை துாக்கும் வேலை பார்த்து வந்ததும் தெரிந்தது.சரண்ராஜ் உடலில், சிறிய அளவிலான காயங்கள் உள்ளன. அவரது உடல், பிரேத பரிசோதனைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.சரண்ராஜ் தவறி கிணற்றில் விழுந்து பலியானாரா அல்லது கொலையா என, போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை