மேலும் செய்திகள்
செடிகளால் குடிநீர் தொட்டி வலுவிழக்கும் அபாயம்
13 hour(s) ago
கிளக்காடி ஏரிக்கால்வாயில் சிறுபாலமின்றி விவசாயிகள் அவதி
13 hour(s) ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சி ஓரிக்கை வசந்தம் நகரில் இருந்து, காஞ்சிபுரம் ஒன்றியம், வளத்தோட்டம் செல்லும் சாலை, திருவண்ணாமலை மாவட்டம், பல்லாவரம், கனிகிலுப்பை உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் சாலை என, மும்முனை சாலை சந்திப்பு உள்ளது.வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டமும் அதிகம் உள்ள மும்முனை சாலை சந்திப்பு பகுதியில், போதுமான மின்விளக்கு வசதி ஏற்படுத்தப்படவில்லை.இதனால், இரவு நேரத்தில் இப்பகுதியில் போதுமான வெளிச்சம் இல்லாமல் உள்ளது. இதனால், இப்பகுதியில் சாலையை கடக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.எனவே, ஓரிக்கை வசந்தம் நகர் மும்முனை சாலை சந்திப்பில், இரவு நேரத்தில் பகல்போல வெளிச்சம் தரும் வகையில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.
13 hour(s) ago
13 hour(s) ago