மேலும் செய்திகள்
வில்வித்தை போட்டியில் வென்ற காஞ்சி மாணவ -- மாணவியர்
22 hour(s) ago
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், சாலவாக்கத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படுகிறது. சாலவாக்கம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்கு மருத்துவ மைய பகுதியாக, இந்த ஆரம்ப சுகாதார நிலையம் இயங்குகிறது.இங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, இரவு நேர மருத்துவர் இல்லாத நிலையில், இப்பகுதிகளைச் சேர்ந்தோர் இரவு நேர மருத்துவ உதவிக்கு, 20 கி.மீ., துாரத்தில் உள்ள செங்கல்பட்டு அல்லது காஞ்சிபுரம் போன்ற பகுதிகளுக்கு செல்லும் நிலை உள்ளது.இதனால், விபத்து உள்ளிட்ட ஆபத்து நேரங்களில் மருத்துவ சிகிச்சைக்கு மக்கள் அவதிப்படும் நிலை உள்ளது. குறிப்பாக பேறு காலங்களில், கர்ப்பிணியர் உயிருக்கு போராடும் நிலை உள்ளது.எனவே, சாலவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி, மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையமாக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என சாலவாக்கம் சுற்று வட்டார கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
22 hour(s) ago