உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / உத்திரமேரூர் முருகன் கோவிலில் தேர் திருப்பணி தீவிரம்

உத்திரமேரூர் முருகன் கோவிலில் தேர் திருப்பணி தீவிரம்

உத்திரமேரூர்:உத்திரமேரூர் முருகன் கோவிலில், மாசி மாதத்தில், 10 நாட்கள் திருவிழா விமரிசையாக நடைபெறும்.கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் வரை இத்திருவிழாவில் தேரோட்டம் நடப்பது வழக்கம். ஆனால், தேர் பழுது மற்றும் நிர்வாக சீர்கேடு உள்ளிட்ட காரணங்களால், கடந்த ஆண்டுகளில் தேரோட்டம் இல்லாமல் திருவிழா மட்டும் நடைபெற்று வருகிறது.இந்நிலையில், இக்கோவிலுக்கு புதியதாக தேர் செய்ய, கோவில் நிர்வாகம் மற்றும் அப்பகுதியினர் தீர்மானித்தனர். அதன்படி, தனி நபர் ஒருவரது பெரும் நன்கொடை உதவியோடு, 28 அடி உயரம் உடைய மரத்தேர் செய்யும் பணி, சில மாதங்களாக நடைபெறுகிறது.தற்போது, தேர் திருப்பணி 80 சதவீதம் நிறைவு பெற்றுள்ள நிலையில், ஓரிரு மாதங்களில் பணி முழுமை பெறும் என கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, மாசி மகோற்சவ விழாவின் போது தேர்த் திருவிழா நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை