உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பாதாள சாக்கடையில் அடைப்பு பாபுகான்தோட்டத்தில் சுகாதார சீர்கேடு

பாதாள சாக்கடையில் அடைப்பு பாபுகான்தோட்டத்தில் சுகாதார சீர்கேடு

காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் மாநகராட்சி எம்.எம்., அவென்யூவிற்கும், மேட்டுத் தெருவிற்கும் இடையே உள்ள பாபுகான்தோட்டம், ராதாகிருஷ்ணன் நகரில், 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, இரு இடங்களில், ஒரு வாரமாக 'மேன்ஹோல்' வழியாக கழிவுநீர் சாலையில் வழிந்தோடி வருகிறது.இதனால், பாதசாரிகள் கழிவுநீரில் நடந்து செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது. வேகமாக செல்லும் வாகனங்களால் நடந்து செல்வோரின் ஆடைகளில் கழிவுநீர் தெளிக்கிறது. துர்நாற்றத்துடன் வெளியேறும் கழிவுநீரால், பாபுகான்தோட்டத்தில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது.எனவே, பாதாள சாக்கடையில் உள்ள அடைப்பை முழுதும் நீக்க, மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாபுகான்தோட்டம், ராதாகிருஷ்ணன் நகரினர் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை