உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பணத்தை திரும்ப கேட்டதால் வாலிபர் கொலை கல்லுாரி மாணவர் இருவருக்கு காப்பு

பணத்தை திரும்ப கேட்டதால் வாலிபர் கொலை கல்லுாரி மாணவர் இருவருக்கு காப்பு

வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியம், அய்யம்பேட்டையைச் சேர்ந்தவர் தனுஷ், 21; கடந்த 6ம் தேதி இரவு அய்யம்பேட்டை கடைத்தெருவுக்கு சென்று வருவதாக கூறி, வீட்டில் இருந்து புறப்பட்ட தனுஷ், வீடு திரும்பவில்லை. தனுஷ் மாயமானது குறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரின்படி, வாலாஜாபாத் போலீசார் விசாரித்து வந்தனர்.இதனிடையே, கடந்த 11ம் தேதி, கோயம்பாக்கம் பாலாற்றங்கரை பகுதியையொட்டிய ஆற்று மண்ணில் ஆண் ஒருவரது கால்கள் மட்டும் வெளியே தெரிவதை கண்டு அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.அப்பகுதிக்கு வந்த வாலாஜாபாத் போலீசார், பாலாற்றில் புதைந்திருந்த ஆண் சடலத்தை மீட்டதோடு, அவர் அய்யம்பேட்டை பகுதியில் காணாமல் போன வாலிபர் தனுஷ் என்பதை உறுதிப்படுத்தினர்.தனுஷ் இறப்பில் உள்ள மர்மம் குறித்து போலீசார் விசாரணையை துவக்கினர். போலீசாரின் தீவிர விசாரணையில், தனுஷ், தன் நெருங்கிய நண்பரான அய்யம்பேட்டை பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் விஷ்வா, 20, என்பவருக்கு, பணம் கடன் கொடுத்துள்ளார்.மேலும், விஸ்வாவிற்கு அடிக்கடி பண தேவை போதெல்லாம் தனுஷ் தனக்கு தெரிந்தவர்களிடம் வட்டிக்கு வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது.அந்த பணத்தை திரும்ப தரும்படி தனுஷ், விஸ்வாவிடம் தொடர்ந்து கேட்டு வந்துள்ளார்.இதனால், ஆத்திரம் அடைந்த விஸ்வா, தனுஷை தீர்த்துக்கட்ட தீர்மானித்துள்ளார்.இதற்கு உதவியாக தன்னுடன் கல்லூரியில் பயிலும் நண்பரான கோயம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சுந்தர், 20, என்பவரை, உடன் அழைத்துக் கொண்டு, காரில் சென்று தனுஷை தனியாக வரவைத்து, காருக்குள் வைத்து கயிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.இதையடுத்து தனுஷ் உடலை கோயம்பாக்கம் பாலாற்று பகுதிக்கு கொண்டு சென்று அங்கு புதைத்துள்ளனர். தனுஷ் காணாமல் போன அன்று கோயம்பாக்கம் சாலையில் சென்ற வாகனங்களின் பதிவெண்களை 'சிசிடிவி' கேமரா மூலம் கண்காணித்து கொலையாளிகளைபோலீசார் துப்பு துலக்கி உள்ளனர்.இதையடுத்து, விஷ்வா மற்றும் சுந்தர் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவர்களை புழல் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி