உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தோசை பண்டு எனும் கிர்ணி பழம் சாகுபடி

தோசை பண்டு எனும் கிர்ணி பழம் சாகுபடி

சவுடு மண்ணில், கிர்ணி பழம் சாகுபடி குறித்து, திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் அடுத்த பிச்சிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பி.எல்.ஆர்., பண்ணை முதுகலை பட்டதாரி முன்னோடி விவசாயி பி.மாதவி கூறியதாவது:எங்களுக்கு சொந்தமான சவுடு மண் நிலத்தில், இயற்கை உரங்களை பயன்படுத்தி, காய்கறி, பூ, பழங்கள் ஆகியவை சாகுபடி செய்து வருகிறேன். அந்த வரிசையில், தோசை பண்டு என அழைக்கப்படும், கிர்ணி பழம் சாகுபடி செய்துள்ளேன்.கிர்ணி பழத்திற்கு, சவுடு கலந்த களிமண் மற்றும் செம்மண் நிலங்களில் நன்றாக விளைச்சலை கொடுக்கும். பிற மண்ணில், கிர்ணி பழ கொடி வருவதிலும், மகசூல் ஈட்டுவதிலும் சிரமமாக இருக்கும். நம்மூர் சவுடு மண்ணுக்கு அருமையாக வளர்கிறது. இயற்கை உரங்கள் மற்றும் நீர் பாசனத்தை முறையாக கையாண்டால், கூடுதல் மகசூல் பெற முடியும். விற்பனை நிலவரத்தை பொறுத்து, கூடுதல் பரப்பளவில் சாகுபடி செய்யலாம்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: பி.மாதவி,97910 82317


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை