உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மாதவரத்தில் கறவை மாடு சிகிச்சை மையம்; ஆவின் நடவடிக்கையால் கேலிக்கூத்து

மாதவரத்தில் கறவை மாடு சிகிச்சை மையம்; ஆவின் நடவடிக்கையால் கேலிக்கூத்து

சென்னை: பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கு, 'ஆவின்' வாயிலாக, கறவை மாடுகள் வாங்குவதற்கு கடன்கள்பெற்று தரப்பட்டு வருகிறது.இதற்காக விண்ணப்பித்து, மாநிலம் முழுதும் 50,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் காத்திருக்கின்றனர்.இந்நிலையில், பால் உற்பத்தியாளர்களின் கறவை மாடுகளுக்கு, இலவச அவசர சிகிச்சை வழங்க, பாரத் நுண்நிதி நிறுவனம் மற்றும் இண்டஸ் இண்ட் வங்கி ஆகியவை முன்வந்துள்ளன.கார்ப்பரேட் சமூக பொறுப்பு நிதி வாயிலாக, இத்திட்டத்தை செயல்படுத்த அந்நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளன.இது தொடர்பாக, இந்த நிதி நிறுவனங்களின் அதிகாரிகளுடன், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று ஆலோசனை நடத்தினார்.தொடர்ந்து, மாதவரத்தில் உள்ள ஆவின் திறன் மேம்பாட்டு மையத்தில், 25 பணியாளர்களை நியமித்து, கறவை சிகிச்சை மையத்தை விரைவில் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.கறவை மாடுகள் வைத்திருப்போர், வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.கிராமப்புறங்களில் கறவை மாடுகள் அதிகம் உள்ள பகுதிகளில், இந்த இலவச சிகிச்சை மையத்தை அமைத்தால், விவசாயிகளுக்கு பெரிய அளவில் உதவியாகஇருக்கும்.சென்னையில், கால்நடைகள் வளர்ப்பதற்கு மாநகராட்சி வாயிலாக தடை விதிக்கப்பட்டு உள்ளது. இங்குள்ள கறவை மாடுகளை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவருகிறது.இந்த நிலையில், கறவை மாடுகளுக்கான சிகிச்சை மையத்தை மாதவரத்தில் அமைக்கவுள்ளதாக, ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது கேலிக்கூத்தாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி