| ADDED : ஜூன் 05, 2024 02:52 AM
இட நெருக்கடிகாஞ்சிபுரம் பொன்னேரிக்கரையில் இயங்கும், அண்ணா பொறியியல் கல்லுாரியில் நேற்று ஆறு சட்டசபை தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணும் அறைகள் தனித்தனியே அமைப்பட்டிருந்தன. 'ஓட்டு எண்ணும் அறையில், கட்சி ஏஜென்டுகளுக்கான வசதி செய்து கொடுக்கப்படவில்லை' என, காஞ்சிபுரம் சட்டசபை தொகுதிக்கான ஓட்டு எண்ணும் அறையில், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியான கலைவாணியிடம், கட்சி ஏஜென்டுகள் வாக்குவாதம் செய்தனர்.'சிறிய அறையில், ஏஜென்டுகள அமருவதற்கு கூட இடமில்லை எனவும், மிகுந்த இட நெருக்கடியில் எவ்வாறு ஓட்டு எண்ணும் பணியில் நிற்க முடியும்' என, உதவி தேர்தல் அதிகாரியான கலைவாணியிடம் வாக்குவாதம் செய்தனர். இதற்கு, 'கட்சி நிர்வாகிகளை இங்கு அழைத்து வந்து வசதிகள் குறித்து விளக்கிய பிறகே, ஏற்பாடுகள் செய்ததாக விளக்கமளித்தார். இருப்பினும், கட்சியினர் தொடர்ந்து வாக்குவாதம் செய்தனர்.