உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / திரவுபதியம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம் விமரிசை

திரவுபதியம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம் விமரிசை

காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் அடுத்த, கோவிந்தவாடி திரவுபதியம்மன் கோவிலில், நேற்று தீமிதி திருவிழா வெகுவிமரிசையாக நடந்தது. கடந்த- 3ம் தேதி மஹாபாரத சொற்பொழிவு கொடி ஏற்றத்துடன் விழா துவங்கியது.திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் தாலுகா நமண்டி கூட்டு சாலை கோவிந்தராஜ் என்பவரின், மஹாபாரத சொற்பொழிவு தினசரி நடந்து வந்தது.கடந்த, 15ம் தேதி அர்ச்சுனன் தபசு நிகழ்ச்சி. நேற்று முன்தினம் இரவு, 18வது நாள் யுத்தமும், நேற்று காலை 10:00 மணி அளவில், துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும் நடந்தன.இதில், பீமன் துரியோதனின் தொடையை பிளந்து, வெற்றி வாகை சூடினார். துரியோதனனின் ரத்தம், பாஞ்சாலி கூந்தலுக்கு தடவும் நிகழ்ச்சி நடந்தது.அதை தொடர்ந்து, காப்பு கட்டிய பக்தர்கள், மாலை தீமிதித்து தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தினர். இன்று தர்மருக்கு பட்டாபிஷேக விழாவுடன் விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ