உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அரசு பள்ளி அருகே திறந்தவெளியில் மின் சுவிட்ச்

அரசு பள்ளி அருகே திறந்தவெளியில் மின் சுவிட்ச்

ஸ்ரீபெரும்புதுார்:- மாத்துார் அரசு பள்ளி அருகே, திறந்தவெளியில் உயரம் குறைவாக உள்ள மின் சுவிட்ச் மற்றும் மீட்டரால், மின் விபத்து ஏற்படும் அச்சத்தில் மாணவர்கள் உள்ளனர்.ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்திற்குட்பட்ட, மாத்துாரில் தி.சு.கி., அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு, சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த 1,000க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர்.ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள இப்பள்ளியின் நுழைவாயிலின் முன் உள்ள மின் கம்பத்தில், அப்பகுதியில் உள்ள தெருவிளக்கு ஆன், ஆப் சுவிட்ச் மற்றும் மீட்டர் வைக்கப்பட்டுள்ளது.இவை, திறந்தநிலையில் உயரம் குறைவாக உள்ளது. யாராவது எதிர்பாராத விதமாக அதில் கை வைத்தால், மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.தவிர, மழை நேரங்களில் பள்ளியின் வெளியில் பேருந்துக்காக காத்திருக்கும் மாணவர்கள், மின் கசிவு ஏற்படும் அச்சத்தில் இருந்து வருகின்றனர். எனவே, அரசு பள்ளி அருகே, உயரம் குறைவாக, ஆபத்தான நிலையில் உள்ள மீட்டர் மற்றும் சுவிட்சை, வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை