உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ரூ.17 லட்சம் இழப்பால் மின் ஊழியர் தற்கொலை

ரூ.17 லட்சம் இழப்பால் மின் ஊழியர் தற்கொலை

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அருகேயுள்ள கருப்படித்தட்டடை கிராமத்தில் உள்ள ரத்தினம் நகரைச் சேர்ந்தவர் ஜெகன், 48; இவர், மனைவி மகேஸ்வரி. இவர்கள் குடும்பத்துடன் வசித்து வந்தார்.பிள்ளையார்பாளையம் பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஒயர்மேனாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், இவரது ஆதார் எண், பான் எண் போன்ற விபரங்களை கொண்டு, இவரது நண்பர், 17 லட்ச ரூபாய், ஆறு மாதங்கள் முன்பாக வங்கிகளில் கடன் வாங்கியிருந்தார்.கடன் வாங்கியது தொடர்பாக, சில நாட்களாக ஜெகன் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை, மகேஸ்வரி, கணவர் ஜெகனை எழுப்ப சென்றார். அப்போது, படுக்கை அறையில் ஜெகன் துாக்குபோட்டு இறந்தது தெரியவந்தது.தகவலறிந்து சென்ற காஞ்சி தாலுகா போலீசார் விசாரணை செய்தனர். அப்போது, 'ஜெகன் வங்கிகளில் வாங்கிய 17 லட்ச ரூபாய் கடன் தொகையை, அவரது நண்பர் பெருமாள் என்பவர், அவரது வங்கி கணக்கிற்கு மாற்றிக் கொண்டதாக' தன் புகாரில் மகேஸ்வரி தெரிவித்துள்ளார். இதையடுத்து, ஜெகன் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ