உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மொபைல்போன் டவர் மீது ஏறி சுற்றுச்சூழல் ஆர்வலர் போராட்டம்

மொபைல்போன் டவர் மீது ஏறி சுற்றுச்சூழல் ஆர்வலர் போராட்டம்

ஸ்ரீபெரும்புதுார்:ஒரகடம் அருகே, மொபைல் போன் டவர் அமைப்பதை எதிர்த்து, 400 அடி டவர் மீது ஏறி, சுற்றுச்சூழல் ஆர்வலர் போராட்டத்தில் ஈடுபட்டார்.காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் அடுத்த, பண்ருட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜானகிராமன், 30, சுற்றுச்சூழல் ஆர்வலர். இவரது வீட்டின் அருகில், புதியதாக மொபைல் போன் டவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது.இந்த நிலையில், நேற்று முன்தினம், இரவு 11:30 மணியவில், ஜானகிராமன் அப்பகுதியில் மொபைல் போன் டவர் அமைப்பதை எதிர்த்து, அங்குள்ள 400 அடி டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்.இது குறித்து, ஒரகடம் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறை வீரர்கள், ஜானகிராமனிடம் பேச்சில் ஈடுபட்டனர்.அரை மணி நேர பேச்சுக்கு பின், அவர் டவர் மேலிருந்து தானாக கீழே இறங்கினார். போலீசார் அவரிடம் அறிவுரை கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை