உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஊசலாடும் மின்கம்பிகள் அச்சத்தில் விவசாயிகள்

ஊசலாடும் மின்கம்பிகள் அச்சத்தில் விவசாயிகள்

துளசாபுரம்:மதுமரமங்கலம் அடுத்த, துளசாபுரம் ஊராட்சியில், ஒண்டிகுடிசை கிராமம் உள்ளது. இந்நிலையில், ஒண்டிகுடிசை - புரிசை-நீலிமேடு இடையே, ஏரி நீர் பாசனம் பெறும் விவசாய நிலங்கள் உள்ளன.இந்த விளை நிலங்களின் வழியாக கம்பம் வாயிலாக மின்வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின் வழித்தடத்தில் செல்லும், மின் கம்பிகள் தாழ்வாக செல்கின்றன.இதன் காரணமாக, வயலில் டிராக்டர் உழவு பணியில் ஈடுபடும் போதும், இயந்திரம் வாயிலாக நெல் அறுவடை செய்யும் போதும், மின்கம்பிகள் உரசும் அபாயம் உள்ளது.எனவே, ஒண்டிகுடிசை - புரிசைநீலிமேடு இடையே தாழ்வாக தொங்கும் மின்கம்பியை இழுத்து கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ