உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கஞ்சா விற்றவர் குண்டாசில் கைது

கஞ்சா விற்றவர் குண்டாசில் கைது

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, சிறுகாவேரிப்பாக்கம், மங்கையர்க்கரசி நகரைச் சேர்ந்தவர் முருகன்,26. இவர், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக, மதுவிலக்கு அமல்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.இவர், தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதால், குண்டர் சட்டத்தில் கைது செய்ய, காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சண்முகம் பரிந்துரை செய்தார்.இதையடுத்து, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி உத்தரவிட்டார். குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கான உத்தரவு நகலை, சிறையில் உள்ள முருகனிடம் போலீசார் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ