உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / நாளை குறைதீர் கூட்டம்

நாளை குறைதீர் கூட்டம்

காஞ்சிபுரம் ; காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் வளாக கூட்டரங்கில், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், மாதம் இரு செவ்வாய்க்கிழமைகளில் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று வந்தார்.லோக்சபா தேர்தல் அறிவிப்புக்கு முன்பு வரை, இக்கூட்டம் காஞ்சிபுரத்தில் நடந்தது. அதன்பின் தேர்தல் நடத்தை விதிமுறைகள், விக்கிரவாண்டி இடைத்தேர்தல், சட்டசபை கூட்டத்தொடர் போன்ற காரணங்களால் நடைபெறாமல் இருந்தது.இந்நிலையில், நாளை காலை 10:00 மணிக்கு, கலெக்டர் வளாக கூட்டரங்கில், அமைச்சர் அன்பரசன் தலைமையில், குறைதீர் கூட்டம் நடக்கும் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதில், பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ