உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / குட்கா விற்றவர் கைது

குட்கா விற்றவர் கைது

ஸ்ரீபெரும்புதுார் : ஸ்ரீபெரும்புதுார் அருகே, மேவளூர்குப்பம் பகுதியில் தமிழகஅரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக, ஸ்ரீபெரும்புதுார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதன் படி, நேற்றுமுன்தினம் இரவு,மேவளூர் குப்பம் பஜார் பகுதியில் உள்ள ஒரு கடையில், போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.இதில், விமல், ஹான்ஸ், கூல்லிப் உள்ளிட்ட குட்கா பொருட்கள் விற்பனைக்காக வைத்துஇருந்தது தெரிந்தது.இதையடுத்து, 2 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, கடையின் உரிமையாளரான அசாம் மாநிலத்தைச் சேர்ந்த நயன் ஜியோடி தாயே, 30, போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை