உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மருத்துவர்கள் கவுரவிப்பு

மருத்துவர்கள் கவுரவிப்பு

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்கத்தின் சார்பில், மருத்துவர்கள் தின விழாவும் மற்றும் தொடர் மருத்துவ கல்வி நிகழ்ச்சியும் காஞ்சிபுரத்தில் நடந்தது.காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்க தலைவர் டாக்டர் சு.மனோகரன் வரவேற்றார். இந்திய மருத்துவ சங்க தமிழ்நாடு மாநில கிளையின் குடும்ப பாதுகாப்பு திட்ட செயலர் டாக்டர் கே. கமலக்கண்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.இந்திய மகளிர் மகப்பேறு மருத்துவர்கள் சங்கத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது, தமிழக அரசின் மருத்துவர் தின விருது என, பல்வேறு விருது பெற்ற ஏழு மருத்துவ நிபுணர்கள் கவுரவிக்கப்பட்டனர்.இந்திய மகளிர்க்கு மார்பகத்தை அகற்றாமல் புற்றுநோய் கட்டியை மட்டும் அகற்றும் ஆன்கோ பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை.சிறுநீரக அறுவை சிகிச்சை மற்றும் சிறுநீரக புற்றுநோய் அறுவை சிகிச்சையில் ரோபோட்டிக் தொழில்நுட்பத்தின் பங்கு' என்ற தலைப்பில் கருத்தரங்குநடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்