உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் தண்டிக்கலாம் பிரசாரத்தில் பா.ஜ., வேட்பாளர் தமிழிசை உத்தரவாதம்

வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் தண்டிக்கலாம் பிரசாரத்தில் பா.ஜ., வேட்பாளர் தமிழிசை உத்தரவாதம்

சென்னை:தென் சென்னை லோக்சபா தொகுதியில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் மருத்துவர் தமிழிசை, சைதாப்பேட்டை பகுதியில், தாமரை சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.அப்போது அவர் கூறியதாவது:தமிழகம் கல்வியில் இவ்வளவு முன்னேறி இருக்கிறது என்றால், அதற்கு காரணம் காமராஜர். அடையாறில் உள்ள அவரின் நினைவிடத்திற்குள் புதர்களும், வெளியில் கரும்பு சக்கை, குப்பை கழிவுகளும் தான் உள்ளன.இப்படி தான், காமராஜரின் நினைவிடம் பராமரிக்கப்படுகிறது. ஒரு தலைவர் நினைவிடம் இப்படியா பராமரிக்கப்படும்? அதே மாதிரியே காந்தி மண்டபமும், ராஜாஜி மண்டபமும் உள்ளது. ஆனால், தி.மு.க., தலைவர்களின் நினைவிடங்கள், அருங்காட்சியகம் மாதிரி பராமரிக்கப்படுகின்றன.காங்., தலைவர்கள் ஒருவருக்குகூட, காமராஜர் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தி பிரசாரத்தை துவங்க வேண்டுமென தோன்றவில்லை.சோனியா, ராகுல், மல்லிகார்ஜுனா கார்கே தமிழகத்திற்கு வந்தபோது, காமராஜர் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்தி உள்ளனரா? கூட்டணி மட்டும் தான் நோக்கம்; தலைவர்களை மதிப்பது கிடையாது.சென்னையில் வெள்ள பாதிப்பை ஏற்படுத்தும் அளவிற்கு தி.மு.க., அரசு, மோசமாக பணிகளை செய்துள்ளது. வெள்ளம் வந்த பின் யாரும் வரவில்லை என்றால், வெள்ளம் வரும்படி ஏன் நடந்து கொண்டீர்கள்? கோவிலம்பாக்கம் கால்வாய், பகிம்ஹாம் கால்வாயை பார்வையிடுங்கள். அதை பார்த்தாலே, எவ்வளவு அவலட்சணமான ஆட்சி நடக்கிறது என்பது தெரிந்துவிடும். டிசம்பர் வந்தாலே மக்கள் திக்... திக்... என பயத்தில் உள்ளனர்.இந்நிலை மாறவும், தென்சென்னையை வளர்ச்சியடைந்த லோக்சபா தொகுதியாக மாற்றவும், தாமரை சின்னத்திற்கு ஓட்டளியுங்கள்.இவ்வாறு தமிழிசை கூறினார்.

தமிழிசை குட்டிக்கதை

வெளிநாட்டிற்கு படிக்க சென்றபோது, பூச்சிக்கு சிலை வைத்திருந்தனர். என்ன எனக் கேட்ட போது, எங்கள் ஊரில் ஏழை விவசாயிகள் இருந்தனர். அவர்கள் பருத்தி போடுவர். அதை வண்டு வந்து சாப்பிடும்; பருத்தி காய்ந்து விடும்.இதுகுறித்து ஆலோசித்தபோது, பெரியவர் ஒருவர் சொன்ன யோசனையை ஏற்று, நிலக்கடலை விவசாயம் செய்தனர். நிலக்கடலை நல்ல விளைச்சல் தந்ததால், விவசாயிகள் வசதியாகி விட்டனர். வண்டு வந்து பருத்தியை சாப்பிட்டதால், மாற்றி யோசித்தோம். எனவே பூச்சிக்கு சிலை வைக்கிறோம் எனக் கூறி சிலை வைத்தனர். எனவே மாற்றி யோசியுங்கள். உங்களிடம் ஓட்டு பெற, அதை வாங்கி தருகிறேன். இதை வாங்கி தருகிறேன் எனக் கூற வரவில்லை.உங்கள் சமுதாயத்தை உயர்த்த வேண்டும் என நினைக்கிறேன். எனக்கு வாய்ப்பு கொடுங்கள். ஒருவேளை நான் செய்யாவிட்டால் கேள்வி கேளுங்கள்; அடிக்கக்கூட செய்யுங்கள்; கல்லை துாக்கி அடியுங்கள் என, தென்சென்னை பா.ஜ., வேட்பாளர் தமிழிசை தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை