உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அரைகுறை மழைநீர் வடிகால் பணி மாத்துாரில் நோய் தொற்று அச்சம்

அரைகுறை மழைநீர் வடிகால் பணி மாத்துாரில் நோய் தொற்று அச்சம்

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், மாத்துார் ஊராட்சியில், ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலையை ஓட்டி மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டது. இந்த நிலையில், மாத்துார் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே, வடிகால் பணி முழுமையாக நிறைவு பெறாமல் அரைகுறையாக விடப்பட்டுள்ளது.இதனால், அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் வழிந்தோடுகிறது. இதனால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதோடு, நோய் தொற்று பரவும் அச்சத்தின் அப்பகுதியினர் உள்ளனர்.மேலும், வடிகால் இல்லாம் கழிவுநீர் செல்லும் கால்வாய் நடுவில் உள்ள மின்கம்பத்தின் அடிப்பகுதி சேதமடைந்து உள்ளதால், மின்கம்பம் விழுந்து மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே, அப்பகுதியில் விடுபட்ட மழைநீர் வடிகால் பணியை முழுமையாக நிறைவு செய்ய, நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி