உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பூட்டி கிடக்கும் நுாலகம் திறக்க வலியுறுத்தல்

பூட்டி கிடக்கும் நுாலகம் திறக்க வலியுறுத்தல்

களக்காட்டூர்:காஞ்சிபுரம் ஒன்றியம், களக்காட்டூர் ஊராட்சி, விச்சந்தாங்கல் கிராமத்தில் இயங்கி வந்த நுாலக கட்டடம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2022- - 23ன்கீழ், 1.10 லட்சம் ரூபாய் செலவில், சுவர், கதவு, ஜன்னல்கள் பழுது பார்த்து, வர்ணம் பூசுதல், புதியகழிப்பறை உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.புனரமைப்பு பணிகள் முடிந்து இரு மாதங்களுக்கு மேலாகியும், நுாலகம் திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை. இதனால், கிராமத்தினர் தினசரி நாளிதழ் வாயிலாக நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்ள முடியாத நிலை உள்ளது.அதேபோல, பள்ளி, கல்லுரி மாணவ- - மாணவியர் விடுமுறை நாட்களில் பொது அறிவை வளர்த்துக் கொள்ளவும், அரசு போட்டித் தேர்வு எழுதும் தேர்வர்கள், தேர்வுக்கு தேவையான முக்கிய குறிப்பு எடுக்க முடியாத சூழல் உள்ளது.எனவே, மூடிக் கிடக்கும் நுாலகத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, விச்சந்தாங்கல் கிராமத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.இதுகுறித்து ஊரக வளர்ச்சி ஊராட்சி துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது:விச்சந்தாங்கல் நுாலகத்தை பராமரிக்க மகளிர் குழுவைச் சேர்ந்த ஒருவர், கடந்த 1ம் தேதி நியமிக்கப்பட்டுள்ளார். மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணியாளர்கள் வாயிலாக நுாலகம் முழுதும் சுத்தப்படுத்தப்பட்டு, இன்று முதல் நுாலகம் செயல்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி