உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கால்வாய்க்கு மூடி அமைக்க வலியுறுத்தல்

கால்வாய்க்கு மூடி அமைக்க வலியுறுத்தல்

வையாவூர்: வையாவூர் ஊராட்சி, காலனி பகுதியில் இயங்கும் அங்கன்வாடி மையத்தில், 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர்.இம்மையத்தை ஒட்டி, வீட்டு உபயோக கழிவுநீர் செல்லும் கால்வாய் உள்ளது. இக்கால்வாய் முழுமையாக மூடப்படாமல் உள்ளது. இதனால், அங்கன்வாடி மையத்திற்கு வந்து செல்லும் குழந்தைகள், கால்வாயில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.எனவே, திறந்து கிடக்கும் கழிவுநீர் கால்வாய் மீது 'கான்கிரீட்' தளம் அமைத்து மூட வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை