உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சி முழுதும் சில்க் மார்க் விழிப்புணர்வு விளம்பர பதாகை வைக்க எதிர்பார்ப்பு

காஞ்சி முழுதும் சில்க் மார்க் விழிப்புணர்வு விளம்பர பதாகை வைக்க எதிர்பார்ப்பு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் உள்ள கடைகளில் பட்டு சேலை வாங்க, வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து, தினமும் ஏராளமானோர் வந்து, தனியார் அல்லது கூட்டுறவு சங்கங்களின் கடைகளில் பட்டு சேலை வாங்கி விட்டு ஊர் திரும்புகின்றனர்.காஞ்சிபுரத்தில், ஒவ்வொரு ஆண்டும் 300 கோடி ரூபாய்க்கு மேல், பட்டு சேலை வியாபாரம் தனியார் மற்றும் கூட்டுறவு சங்க கடைகளில் நடைபெறுகிறது.இதற்கென, வெளி மாநிலங்களில் இருந்து வரும் வாடிக்கையாளர்களை குறிவைத்து, புரோக்கர்கள் சிலர், போலி பட்டு சேலைகளை விற்பனை செய்கின்றனர்.இதன் காரணமாக, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகமும், கைத்தறி துறையும், காஞ்சிபுரம் நகரில் முக்கிய இடங்களில் விழிப்புணர்வு பதாகைகள் வைத்தனர்.காஞ்சிபுரம் நகரில் பேருந்து நிலையம், காந்திரோடு, சங்கர மடம், நடுத்தெரு உள்ளிட்ட இடங்களில், இந்த விழிப்புணர்வு பதாகைகள் இடம்பெற்றுள்ளன.அதில், 'சிலக் மார்க்' பற்றிய விபரங்களும், அவை உள்ள சேலைகளே உண்மையான பட்டுச்சேலை என்ற விழிப்புணர்வு வாசகங்கள் இடம் பெற்றன. வெளியூர் வாடிக்கையாளர்களுக்கு, இந்த விழிப்புணர்வு பதாகைகள் பெரிதும் உதவின. ஆனால், நாளடைவில் நகரில் வைக்கப்பட்ட பதாகைகள் மாயமாகிவிட்டன.உண்மையான பட்டு சேலை வாங்க உதவிய இந்த விழிப்புணர்வு பதாகைகள் மீண்டும் வைக்கப்படவில்லை.இந்நிலையில், 'சில்க் மார்க்' பற்றிய விபரங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை, நகர் முழுதும், மாவட்ட நிர்வாகம் மீண்டும் வைக்க வேண்டும் என, நெசவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி