| ADDED : மே 02, 2024 10:00 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கிழக்கு ரோட்டரி சங்கம் சார்பில், ஆண்டுதோறும் கபடி தொடர் பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 2ம் ஆண்டு 100 நாட்கள் நடைபெறும் கபடி தொடர் பயிற்சி முகாம் வரும் 6ம் தேதி, காஞ்சிபுரம் சுப்பராய முதலியார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் துவங்குகிறது.ஆக., 19ம் தேதி வரை என, 100 நாட்கள் நடக்கும் இப்பயிற்சிமுகாமில், 6 - 9ம் வகுப்பு வரை படிக்கும், 14 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் மட்டும் பங்கேற்கலாம். காலை 6:00 மணி முதல், 8:30 மணி வரை பயிற்சி நடைபெறுகிறுது.மேலும் விபரங்களுக்கு, கபடி பயிற்சியாளர் 97896 69975, ஒருங்கிணைப்பாளர் 98848 49027 என்ற மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.