உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சிபுரம்: புகார் பெட்டிூபயன்பாட்டில்லாத குடிநீர் தொட்டி இடித்து அகற்றப்படுமா?

காஞ்சிபுரம்: புகார் பெட்டிூபயன்பாட்டில்லாத குடிநீர் தொட்டி இடித்து அகற்றப்படுமா?

பயன்பாட்டில்லாத குடிநீர் தொட்டி இடித்து அகற்றப்படுமா?

வாலாஜாபாத் ஒன்றியம், ஏனாத்துாரில், 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் துாண்களில் விரிசல் ஏற்பட்டு, பயன்படுத்த முடியாத நிலையில் சிதிலமடைந்து உள்ளது. இதனால், அதற்கு மாற்றாக புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு உள்ளது.இருப்பினும், பயன்பாட்டில் இல்லாத சேதமடைந்த பழைய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இடிக்கப்பட்டு அகற்றப்படாமல் உள்ளது.துாண்கள் வலுவிழுந்த சேதமடைந்த நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இடிந்து விழுந்தால் வாகன போக்குவரத்து பொதுமக்கள் நடமாட்டம் உள்ள இப்பகுதியில், விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.எனவே, பயன்பாட்டில்லாத மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை பாதுகாப்பாக இடித்து அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-- சி.மணிகண்டன்,காஞ்சிபுரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை