உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அன்னாத்தூர் கொம்மியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்

அன்னாத்தூர் கொம்மியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஒன்றியம், அன்னாத்தூர் கிராமத்தில், கொம்மியம்மன் கோவில் உள்ளது. சிறிய வடிவிலாக இருந்த இக்கோவிலை புதிய வடிவில் புனரமைக்க அப்பகுதியினர் தீர்மானித்தனர்.அதன்படி, அன்னாத்தூரில் மண்டபத்துடன்கூடிய கோபுர வடிவிலான கோவில் கட்டுமான பணி, சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.பணி முழுமையாக நிறைவு பெற்றதையடுத்து, நேற்று, மஹா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி, வெள்ளி அன்று அனுக்கை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் மற்றும் யாகசாலை பூஜைகளும் நேற்று முன்தினம் விநாயகர் பூஜை, மற்றும் தீபாரதனை நடந்தது. நேற்று, காலை 9:30 மணிக்கு கோபுர கலசம் மீது புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை