உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கற்பக விநாயகருக்கு நாளை கும்பாபிஷேகம்

கற்பக விநாயகருக்கு நாளை கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் ஒன்றியம், காவாந்தண்டலம் கிராமத்தில் கற்பக விநாயகர் மற்றும் வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியர் கோவில் உள்ளது. பழமையான இக்கோவிலில், 2005ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. எனவே, இக்கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த ஹிந்து சமய அறநிலையத் துறையினர் முடிவு செய்தனர். அதன்படி, கடந்த பிப்., 23ல் பாலாலயம் நடந்தது. இந்நிலையில், 80 லட்சம் ரூபாய் செலவில் பல்வேறு திருப்பணிகள் சமீபத்தில் முடிக்கப்பட்டன.கும்பாபிஷேகத்தையொட்டி, நேற்று காலை 9:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜை துவங்கியது. இன்று காலை 9:00 மணிக்கு இரண்டாம் கால வேள்வி நடக்கிறது. மாலை 6:00 மணக்கு முனைவர் காவாந்தண்டலம் பழனி குழுவினரின் வில்லிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.நாளை காலை 6:00 மணிக்கு நான்காம் கால யாகசாலை வேள்வியும், காலை 9:15 மணிக்கு கோவில் கோபுர விமானத்திற்கும், தொடர்ந்து மூலவருக்கும் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. மதியம் 12:00 மணிக்கு மஷா அபிஷேகமும், இரவு 7:00 மணிக்கு கற்பக விநாயகர் வீதியுலாவும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி