உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பைரவர் சுவாமிக்கு கும்பாபிஷேகம்

பைரவர் சுவாமிக்கு கும்பாபிஷேகம்

வாலாஜாபாத் : வாலாஜாபாத் ஒன்றியம், திம்மராஜம்பேட்டையில் கெங்கை அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், புதிதாக பைரவர் சன்னிதி அமைக்க கிராமத்தினர் தீர்மானித்தனர்.அதன்படி, பைரவர் சன்னிதி அமைக்கப்பட்டு, நேற்று மஹா கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக நேற்று முன்தனம் யாகசாலை பூஜைகளும், பூர்ணஹூதி ஆராதனையும் நடைபெற்றது.நேற்று காலை கலச புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து மூலவராக விளங்கும் கெங்கையம்மன் மற்றும் முருகன், விநாயகருக்கு புனித நீர் ஊற்றப்பட்டது.அதை தொடர்ந்து, பைரவர் சுவாமிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதில், திம்மராஜம்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை