உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பள்ளி காலை உணவில் பல்லி இரண்டு மாணவியருக்கு பாதிப்பு

பள்ளி காலை உணவில் பல்லி இரண்டு மாணவியருக்கு பாதிப்பு

சித்தாமூர், சித்தாமூர் அருகே பொலம்பாக்கம் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்படுகிறது. இங்கு, 73 மாணவர்கள், 80 மாணவியர் என, மொத்தம் 153 பேர் படித்து வருகின்றனர்.நேற்று, பள்ளியில் காலை உணவு திட்டத்தின் கீழ், மாணவ - மாணவியருக்கு கோதுமை கிச்சடி மற்றும் முள்ளங்கி சாம்பார் வழங்கப்பட்டது. இதை, 40 பேர் சாப்பிட்டுள்ளனர்.சாப்பிட்டுக் கொண்டு இருந்த போதே, 6ம் வகுப்பு மாணவியர் ரோஷினி, 11, மற்றும் லக்ஷனா, 11, இருவரும், உணவில் பல்லி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, வாந்தி எடுத்து உள்ளனர்.அதுகுறித்து ஆசிரியர்களிடம் தெரிவித்ததையடுத்து, மாணவ - மாணவியர் சாப்பிடுவதை நிறுத்தி, அவர்களிடம் இருந்த உணவு வாங்கப்பட்டது.பின், வாந்தி எடுத்த இரண்டு மாணவியருக்கும், பொலம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது.இதையடுத்து, மாணவியர் பெற்றோர்களின் விருப்பத்தின்படி, மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.சம்பவம் குறித்து அறிந்து, மருத்துவமனைக்கு வந்த மதுராந்தகம் ஆர்.டி.ஓ., தியாகராஜன் மற்றும் செய்யூர் வட்டாட்சியர் சரவணன், சிகிச்சை பெற்று வந்த மாணவியரிடம் நலம் விசாரித்தனர்.பின், பொலம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு சென்று, அரசி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வைக்கப்பட்டுள்ள இடம் மற்றும் சாப்பாடு செய்யும் இடத்தை சோதனையிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை