உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / லோடு ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுனர் பலி

லோடு ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுனர் பலி

குன்றத்துார்:கரூர் மாவட்டம், குளித்தலை பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ், 29; ஓட்டுனர். நேற்று அதிகாலை, வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்டச் சாலை வழியாக, பூந்தமல்லியில் இருந்து தாம்பரம் நோக்கி, லோடு ஆட்டோ ஓட்டிச் சென்றார்.குன்றத்துார் அருகே, கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலை ஓரத்தில் உள்ள தடுப்பு சுவரில் மோதி, கவிழ்ந்தது. இதில் படுகாயமடைந்த பிரகாஷ், சம்பவ இடத்திலேயே இறந்தார். உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர். தொடர்ந்து, சாலையில் கவிழ்ந்த லோடு ஆட்டோவை அப்புறப்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி