| ADDED : ஜூலை 18, 2024 11:09 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு துறை சார்பில், தமிழ்நாடு நாள் விழா, நேற்று, மவுலிவாக்கம் கிளையில், வெகு விமரிசையாக நடந்தது. இந்த விழாவிற்கு, காஞ்சிபுரம் மண்டல இணைப் பதிவாளர் ஜெயஸ்ரீ தலைமை வகித்தார்.கூட்டுறவு துறை சேவைகள், கூட்டுறவு துறை உறுப்பினராக சேருவதால் ஏற்படும் நன்மைகள், குறைந்த வட்டியில் வழங்கப்படும் கடன்கள், டிராக்டர், டிரோன், நெல் அறுவடை இயத்திரம் மற்றும் லாரி ஆகிய வாகனங்களின் குறைந்த வாடகை கட்டணம் குறித்து எடுத்துரைத்தார். ஆறு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு குழுக்கடன், ஒன்பது நபர்களுக்கு தனி நபர் கடன், இரண்டு விதவைகளுக்கு விதவை கடன் என மொத்தம், 36.95 லட்ச ரூபாய் கடனாக வழங்கப்பட்டன.