உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / உலகளந்த பெருமாள் கோவிலில் வரும் 28ல் மஹா கும்பாபிஷேகம்

உலகளந்த பெருமாள் கோவிலில் வரும் 28ல் மஹா கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோவில், 108 திவ்ய தேசங்களில், 54வது திவ்யதேசமாக விளங்குகிறது. இத்தலத்தில் உள்ள உலகளந்த பெருமாள் வலது கால் ஊன்றி, இடது கால் துாக்கிய நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள 22 திவ்யதேசங்களில் தொண்டை நாட்டு திருத்தலங்களில் இத்தலம் கச்சி ஊரகம் என அழைக்கப்படுகிறது.கச்சி என்றால் காஞ்சிபரம். ஊரகம், நீரகம், காரகம், கார்வானம் ஆகிய நான்கு திவ்யதேசங்கள் இந்த ஒரே கோவிலுக்குள் அமைந்துள்ளது. பெருமாளின் 108 திவ்யதேசங்களில் நான்கை, இந்த ஒரே கோவிலில் தரிசனம் செய்யலாம்.பல்வேறு சிறப்பு பெற்ற இக்கோவிலில், 2007ம் ஆண்டு, மார்ச் 25ல் கும்பாபிஷேகம் நடந்தது.இந்நிலையில் இக்கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. இதையடுத்து 1 கோடி ரூபாய் செலவில், கோவில் ராஜகோபுரம், பிற சன்னிதிகள், கோவில் வளாகம் தரை பகுதி என, பல்வேறு திருப்பணிகள் சமீபத்தில் செய்து முடிக்கப்பட்டன.கும்பாபிஷேகத்தையொட்டி வரும் 25ம் தேதி காலை யாகசாலை பூஜை துவங்குகிறது. இதில், 28ம் தேதி, காலை 10:30 மணிக்கு மேல், 11:30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து வேதபிரபந்த சாற்றுமறையும், மாலை 6:30 மணிக்கு சுவாமி வீதியுலா நடைபெறுகிறது.கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாட்டை கோவில் செயல் அலுவலர் ராஜமாணிக்கம், பரம்பரை அறங்காவலர்கள் அப்பன் அழகிய சிங்கர், கோமடம் ரவி, போரகத்தி பட்டர் ரகுராம், கோவில் பட்டாச்சாரியார்கள், கைங்கர்யபரர்கள், கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் இணைந்து செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை