உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தேரோட்டத்திற்காக கழற்றப்பட்ட வழிகாட்டி பலகை மீண்டும் பொருத்த வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்

தேரோட்டத்திற்காக கழற்றப்பட்ட வழிகாட்டி பலகை மீண்டும் பொருத்த வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்

காஞ்சிபுரம்:உத்திரமேரூரில் பிரசித்தி பெற்ற சுந்தர வரதராஜ பெருமாள் கோவில் சித்திரை பிரம்மோற்சவத்தை ஒட்டி, கடந்த 23ம் தேதி தேரோட்டம் நடந்தது.இதையொட்டி, தேரோட்ட சாலைகளில் ஒன்றான பஜார் வீதி, பேருந்து நிலையம் அருகில் வெளியூர் வாகன ஓட்டிகளின் வசதிக்காக மேல்மருவத்துார், அச்சிறுபாக்கம், சென்னை, செங்கல்பட்டு, மதுராந்தகம் ஊர்களுக்கு எந்த திசையில் செல்ல வேண்டும் என அமைக்கப்பட்டிருந்த வழிகாட்டி பெயர் பலகையை நெடுஞ்சாலைத்துறையினர் கழற்றி, வைகுண்ட பெருமாள் கோவில் அருகில் வைத்தனர்.கடந்த மாதம், 26ம் தேதி பிரம்மோற்சவம் நிறைவடைந்தது. இந்நிலையில், தேரோட்டத்திற்காக கழற்றப்பட்ட வழிகாட்டி பெயர் பலகையை, 10 நாட்களாகியும் மீண்டும் அதே இடத்தில் பொருத்தப்படாமல் உள்ளது.இதனால், வெளியூரில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் தாங்கள் செல்ல வேண்டிய ஊரின் திசையில் திரும்பாமல், வழிதவறி மாற்று ஊருக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.எனவே, உத்திரமேரூர் பஜார் வீதியில் கழற்றப்பட்ட வழிகாட்டி பெயர் பலகையை மீண்டும் பொருத்த, நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை