உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கால்நடை தொட்டிகளில் நீர் நிரப்ப உத்தரவு கோடை முடியும் வரை கண்காணிக்க அறிவுரை

கால்நடை தொட்டிகளில் நீர் நிரப்ப உத்தரவு கோடை முடியும் வரை கண்காணிக்க அறிவுரை

காஞ்சிபுரம்:கோடை காலம் முழுதும், ஊராட்சி கால்நடை குடிநீர் தொட்டிகளில், தண்ணீரை நிரப்பும்படி ஊரக வளர்ச்சி துறை உத்தரவிட்டுள்ளது. இதன் மூலமாக, ஆடு, மாடுகளின் இறப்பு தவிர்க்க வழி வகுக்கும் என, அத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன. இந்த கிராமங்களில், 20வது கால்நடைகள் கணக்கெடுப்புபடி, 19,652 எருமை மாடுகள் உட்பட, 1.87 லட்சம் கால்நடைகள் உள்ளன.மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு, மாடுகளுக்கு, தண்ணீர் தாகம் தீர்க்கும் வகையில், ஊராட்சிகள்தோறும் ஆங்காங்கே குடிநீர் தொட்டிகளை, ஊரக வளர்ச்சி துறை கட்டிக் கொடுத்து உள்ளன. இந்த தொட்டிகளில், பயன்பாடு இன்றி சீமைக்கருவேல மரங்கள், செடி, கொடிகள் புதர் மண்டி இருந்தன. தற்போது, கோடை காலம் துவங்கி இருப்பதால், அனைத்து விதமான குடிநீர் தேக்க தொட்டிகளை சுத்தம் செய்து, ஊராட்சி நிர்வாகம் தண்ணீரை நிரப்ப வேண்டும் என, காஞ்சிபுரம் ஊரக வளர்ச்சி துறை, ஊராட்சிகளுக்கு அறிவுரை வழங்கி உள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டம் முழுதும், 309 குடிநீர் தொட்டிகளில், தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது. மேய்ச்சலுக்கு சென்று கிராமத்திற்கு திரும்பும் ஆடு, மாடுகளுக்கு தாகம் தீர்க்க வழி வகுக்கும் என, துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.இதன் மூலமாக, ஊராட்சிகளில் ஆடு, மாடு இறப்புகளை தவிர்க்க வழி வகுக்கும் என, துறை அலுவலர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை உயதிகாரி ஒருவர் கூறியதாவது:கடுமையான வெயில் காரணமாக, மனிதர்கள் மட்டுமல்லாமல், ஆடு, மாடு ஆகிய விலங்குகளும் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக, கோடை காலத்தில், நாக்கு வறட்சி ஏற்பட்டு ஆடு, மாடுகள் இறக்க நேரிடும் அபாயம் உள்ளது.இதை தவிர்க்க, ஊராட்சிதோறும் கட்டி உள்ள குடிநீர் தொட்டிகளில் தண்ணீரை நிரப்பிவைக்கும் படி, ஊராட்சி நிர்வாகங்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளோம். இந்த கோடை காலம் முடியும் வரையில், அனைத்து ஊராட்சி செயலர்களிடம், குடிநீர் தொட்டிகளில் தண்ணீர் குறையாத அளவிற்கு வைத்திருக்கும் படி கூறியுள்ளோம்.இதன் மூலமாக, ஊராட்சிகளில் ஆடு, மாடுகளுக்கு தண்ணீர் கிடைப்பதோடு, விலங்குகளின் இறப்பு தவிர்க்க வழி வகுக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

கால்நடை விபரம்

வகைகள் எண்ணிக்கைகறவை மாடுகள் 1,68,252எருமை மாடுகள் 19,652செம்மறியாடுகள் 60,265வெள்ளாடுகள் 69064பன்றிகள் 84நாய்கள் 11,462கோழிகள் 81879மொத்தம் 4,10,658


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை