உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஊராட்சி மாஜி தலைவர் மகன் விபத்தில் உயிரிழப்பு உடல் உறுப்புகள் தானம்

ஊராட்சி மாஜி தலைவர் மகன் விபத்தில் உயிரிழப்பு உடல் உறுப்புகள் தானம்

பூந்தமல்லி:ஸ்ரீபெரும்புதுார் அருகே மொளச்சூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஆரோக்கியசாமி மகன் இளங்கோ, 42. இவர், தொழிற்சாலைகளுக்கு 'மேன்பவர் சப்ளை' செய்யும் தொழில் செய்து வந்தார்.இவர், நேற்று முன்தினம் பூந்தமல்லி அருகே காட்டுப்பாக்கத்தில் சாலையோரம் காரை நிறுத்தி, அப்பகுதியில் உள்ள சாய்பாபா கோவிலில் வழிபாடு செய்தார்.பின் சாலையை கடக்க முயன்றபோது, அந்த வழியே வேகமாக சென்ற டி.வி.எஸ்., ஸ்டார் சிட்டி பைக் அவர் மீது மோதியது.இதில் பலத்த காயமடைந்த இளங்கோ, போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து ஏற்படுத்திய பைக் ஓட்டுனர் குமரேசன், 23, என்பவரை, ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.இந்த நிலையில், இளங்கோவின் உடல் உறுப்புகளை அவரது பெற்றோர் தானம் செய்தனர்.இதையடுத்து, மொளச்சூரில் குமரேசன் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தி நேற்று அடக்கம் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை