உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அரசு பள்ளிகளில் அட்மிஷன் காஞ்சியில் பெற்றோர் ஆர்வம்

அரசு பள்ளிகளில் அட்மிஷன் காஞ்சியில் பெற்றோர் ஆர்வம்

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார், வாலாஜாபாத், காஞ்சிபுரம் ஆகிய ஐந்து ஒன்றியங்களில் அரசு தொடக்கம், நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை என, 581 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில், கோடை விடுமுறை முடிந்து நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன.பள்ளி துவங்கிய முதல் நாளில், மாணவ - மாணவியர் உற்சாகத்துடன் பள்ளிக்கு சென்றனர். பள்ளி துவக்க நாளிலேயே மாணவ - மாணவியருக்கு பாடப்புத்தகம் வழங்கப்பட்டது.காஞ்சிபுரம், திருக்காலிமேடு மாநகராட்சி துவக்கப் பள்ளியில், ஐந்து வயது நிரம்பிய குழந்தைகளை முதல் வகுப்பில் சேர்ப்பதற்கு பெற்றோர் பலர் தங்களது ஐந்து வயது நிரம்பிய குழந்தைகளுடன் காத்திருந்தனர்.முதல் வகுப்பில் சேர்ந்த மாணவ - மாணவியருக்கு தலைமை ஆசிரியர் மோகன்குமார் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பாடப்புத்தகம் மற்றும் இனிப்பு வழங்கினர்.காஞ்சிபுரம் யதோக்தகாரி மாநகராட்சி துவக்கப் பள்ளியில், மாணவ - மாணவியருக்கு இனிப்பு வழங்கி வரவேற்றனர். கல்வி கடவுள் சரஸ்வதி தேவி படத்திற்கு மாலை அணிவித்து விசேஷ பூஜை செய்யப்பட்டது. மாணவ - மாணவியர் சரஸ்வதி தேவியை வழிபட்டபின் வகுப்பறை சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை