உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / நடைபாதை மேல்தளம் சேதம் விபத்தில் சிக்கும் பாதசாரிகள்

நடைபாதை மேல்தளம் சேதம் விபத்தில் சிக்கும் பாதசாரிகள்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பேருந்து நிலையம் வெளிப்புறம் உள்ள காமராஜர் சாலையின் இருபுறமும், மழை நீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இக்கால்வாய் மீது பாதசாரிகள் நடந்து செல்லும் வகையில் டைல்ஸ் பதிக்கப்பட்டு நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பில் உள்ள இக்கால்வாயில், பேருந்து நிலையம் நுழைவாயில் அருகில் வடக்கு பகுதியில், கால்வாய் மீது போடப்பட்டுள்ள 'கான்கிரீட்' தளம்உடைந்த நிலையில்உள்ளது.இதனால், நடைபாதையில் நடந்து செல்லும் பாதசாரிகள் திறந்து கிடக்கும் கால்வாயில் தவறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.எனவே, திறந்து கிடக்கும் மழை நீர் கால்வாய் மீது 'கான்கிரீட்' தளம் அமைத்து சீரமைக்க, நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.இதுகுறித்து காஞ்சிபுரம் நெடுஞ்சாலைத் துறை அதிகாரி கூறியதாவது:காஞ்சிபுரம் காமராஜர்வீதியில் கால்வாய் மீது அமைக்கப்பட்டுள்ள நடைபாதை சேதமடைந்துள்ளதை, சம்பந்தப்பட்ட பிரிவு உதவி பொறியாளரை நேரில் சென்று ஆய்வு செய்யவும்,சீரமைப்பு பணி மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர்கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை