உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கோவில் அருகே மழைநீர் தேக்கம்

கோவில் அருகே மழைநீர் தேக்கம்

மதுரமங்கலம், : சுங்குவார்சத்திரம் அடுத்த மதுரமங்கலம் கிராமத்தில், எம்பார் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே, சிறு மின் விசை நீர்த்தேக்க தொட்டி அமைந்துள்ளது.இந்த தெருவில் போதிய வடிநீர் கால்வாய் வசதி இல்லாததால், சிறிய மழைக்கே சாலையோரம் தண்ணீர் தேங்கும் சூழல் உருவாகி உள்ளது.இந்த தண்ணீரை வெளியேற்ற ஊராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, பக்தர்கள் இடையே புலம்பலை ஏற்படுத்தி உள்ளது. இதனால், சாலை வழியாக செல்லும் பக்தர்கள் முகம்சுளித்தபடி சென்று வருகின்றனர்.எனவே, எம்பார் திருக்கோவில் அருகே தேங்கியுள்ள தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை