உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / நெற்களத்தில் மழைநீர் தேக்கம்

நெற்களத்தில் மழைநீர் தேக்கம்

விஷார்:காஞ்சிபுரம் ஒன்றியம், விஷார் ஊராட்சியைச் சேர்ந்த விவசாயிகள், தங்களது நிலங்களில் அறுவடை செய்யும் நெல்மணிகளை உலர வைப்பதற்காக, காஞ்சிபுரம் ஊரகவளர்ச்சி ஊராட்சி துறை சார்பில் நெற்களம் அமைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், காஞ்சிபுரம் வட்டாரத்தில் சில நாட்களுக்கு முன் பெய்த மழையால், நெற்களத்தின் நுழைவாயில் பகுதியில் உள்ள பள்ளத்தில் குட்டைபோல தேங்கியுள்ள மழைநீரில் பாசி படர்ந்துள்ளது.நாள் கணக்கில் தேங்கியுள்ள மழைநீரில், டெங்குவை பரப்பும் 'ஏடிஸ்' கொசுக்கள் உற்பத்தியாகும் சூழல் உள்ளது. இதனால், விஷார் கிராமத்தினருக்கு, டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது.எனவே, நெற்களம் நுழைவாயிலில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றவும், மீண்டும் மழைநீர் தேங்காமல் இருக்க நெற்களம் நுழைவாயில் பகுதியை சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விஷார் கிராமத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ