உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ராயப்பேட்டை அரசு மருத்துவமனை சூறை போதை கும்பல் அட்டூழியம்; நோயாளிகள் அச்சம்

ராயப்பேட்டை அரசு மருத்துவமனை சூறை போதை கும்பல் அட்டூழியம்; நோயாளிகள் அச்சம்

சென்னை : சென்னை மாநகரில் உள்ள பிரதான அரசு மருத்துவமனைகளில், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையும் ஒன்று.இங்கு நேற்று வந்த போதை கும்பல், மருத்துவமனையை சூறையாடி, 'பிளேடு'களை விழுங்கி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.சென்னை, மயிலாப்பூர்,தேனாம்பேட்டை, அபிராமபுரம் உள்ளிட்ட பகுதிகளில், நாளுக்கு நாள் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை அதிகரித்து உள்ளது.அதேபோல கல்லுாரி, பள்ளி மாணவர்களிடையேயும் போதை மாத்திரைகள் புழக்கம் சர்வசாதாரணமாகி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.இந்நிலையில், போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட, மயிலாப்பூரைச் சேர்ந்த 'சைக்கோ' சரண், 28, 'போண்டா' ராஜேஷ், 29, தினேஷ், 28, ஆகிய மூன்று பேரை, அபிராமபுரம் போலீசார் நேற்று கைது செய்தனர். இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பதற்கு, போலீசார் முடிவு செய்தனர்.இதையடுத்து, மருத்துவ சான்றிதழ் பெறுவதற்காக, மூன்று பேரையும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அப்போது மருத்துவமனைக்குள் திடீரென, மற்றொரு போதை கும்பல் புகுந்தது.அவர்கள் அவசர சிகிச்சை பிரிவில் இருந்தபடி, 'கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்' எனக் கூறி மிரட்டல் விடுத்தனர். அப்போது, பிளேடால் கிழித்துக்கொண்டு, அவர்கள் தற்கொலைக்கு முயற்சித்தனர்.அதிர்ச்சியடைந்த மருத்துவமனை ஊழியர்கள், அவர்களை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆத்திரமடைந்த அந்த கும்பல், அவசர சிகிச்சை பிரிவில் இருந்த நோயாளிகளை பரிசோதிக்கும் கருவிகள் மற்றும் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.போலீசார் பிடிக்க வந்தபோது, அங்கிருந்துசிலர் தப்பினர். அதில் இருவர், பிளேடு துண்டுகளை விழுங்கி, போலீசாரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினர்.அவர்களை அதே மருத்துவமனையில், சிகிச்சைக்காக போலீசார் அனுமதித்துள்ளனர். மேலும், அவர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.இந்த சம்பவத்தால் மருத்துவமனை ஊழியர்கள், நோயாளிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். இச்சம்பவம், மருத்துவமனையின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது.சம்பவம் குறித்து, ராயப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை