உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வயலக்காவூரில் பயன்பாட்டில் இல்லாத குடிநீர் தொட்டியை அகற்ற கோரிக்கை

வயலக்காவூரில் பயன்பாட்டில் இல்லாத குடிநீர் தொட்டியை அகற்ற கோரிக்கை

உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வயலக்காவூர் கிராமத்தில், பல ஆண்டுகளுக்கு முன் கட்டிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுதடைந்தது. இதையடுத்து அந்த டேங்க் அருகே புதிய நீர்த்தேக்க தொட்டி கட்டி தற்போது பயன்பாட்டில் உள்ளது.எனினும், பழுதான பழைய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அகற்றாமல் உள்ளது. அப்பகுதி சாலையொட்டி விவசாய நிலங்களுக்கு செல்லும் வழியில் உள்ள இந்த டேங்க் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழக்கூடும் என்ற நிலை உள்ளது.எனவே, விபத்து அபாயத்திற்கு முன்னதாக இப்பகுதியில் கைவிடப்பட்ட பழைய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை