| ADDED : மே 31, 2024 03:43 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் தனியார் திருமண மண்டபத்தில், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம் நேற்று நடந்தது.இந்த கூட்டத்திற்கு, வாலாஜாபாத் ஒன்றிய ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு குழு தலைவர் அஜய்குமார் தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு குழு மாநில தலைவர் முனியாண்டி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். ஊராட்சி தலைவர்களின் பதவி காலம் முடிவதற்கு முன் கலைக்க கூடாது. முன்கூட்டியே கலைக்கப்படும் சூழல் ஏற்பட்டால், நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்படும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார், உத்திரமேரூர் ஆகிய ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர்கள் மற்றும் ஊராட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.