| ADDED : மே 07, 2024 04:20 AM
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அடுத்த சேந்தமங்கலம் கிராமத்தில் இருந்து, சித்துார் கிராமம் வழியாக முருங்கை கிராமத்திற்கு செல்லும் பிதான சாலை உள்ளது. இந்த சாலை வழியாக, சித்துார், தண்டலம், முருங்கை, கணபதிபுரம் ஆகிய கிராமத்தினர் சேந்தமங்கலம் பேருந்து நிறுத்தங்களின் வழியாக, காஞ்சிபுரம், அரக்கோணம், நெமிலி ஆகிய பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.இதில், சேந்தமங்கலம் - சித்துார் இடையே, நான்கு இடங்களில் அபாயகரமான சாலை வளைவுகள் உள்ளன. இந்த வளைவுகளில் தடுப்புகள் இல்லை.இதுதவிர, பிதான சாலை சில பகுதிகளில் சாலையோர மின்விளக்கு வசதி இல்லை. இதனால், சைக்கிளில் செல்வோர் நிலை தடுமாறி கவிழும் நிலை உள்ளது.எனவே, சேந்தமங்கலம் - சித்துார் இடையே இருக்கும் சாலை வளைவுகளில், இருபுறமும் தடுப்பு வசதி ஏற்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.