உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / துணை சுகாதார நிலைய கூரையில் வளர்ந்துள்ள அரச மர செடிகள்

துணை சுகாதார நிலைய கூரையில் வளர்ந்துள்ள அரச மர செடிகள்

காஞ்சிபுரம் : வாலாஜாபாத் ஒன்றியம், முத்தியால்பேட்டை ஊராட்சியில், துணை சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இங்கு ஏரிவாய், வள்ளுவபாக்கம், முத்தியால்பேட்டை, படப்பம், இந்திரா நகர் உள்ளிட்ட பகுதியினர் பல்வேறு நோய்களுக்கு மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர்.துணை சுகாதார நிலையம் இயங்கும் கட்டடத்தை முறையாக பராமரிக்காததால், கட்டடத்தின் கூரையில் அரச செடிகள் வளர்ந்துள்ளன. செழித்து வளரும் இச்செடிகளால் துணை சுகாதார நிலைய கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டு நாளடைவில் வலுவிழந்து இடிந்து விழும் சூழல் உள்ளது.எனவே, துணை சுகாதார நிலைய கூரையில் வளர்ந்துள்ள அரச மர செடிகளை வேருடன் அகற்ற துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி