உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பல்லாங்குழியான அதிவிரைவு சாலையால் செட்டிபேடு பகுதிவாசிகள் அவதி

பல்லாங்குழியான அதிவிரைவு சாலையால் செட்டிபேடு பகுதிவாசிகள் அவதி

தண்டலம்:சென்னை - பெங்களூரு அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்துக்குட்பட்ட செட்டிபேடு. இப்பகுதியில், 2014ல் இச்சாலையை ஆறுவழிச் சாலையாக விரிவாக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு, ஒப்பந்தங்கள் விடப்பட்டு 2018-ம் ஆண்டின் இறுதியில் பணி தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.மாநில நெடுஞ்சாலை துறையால் மேற்கொள்ளப்பட்ட மதுரவாயல் முதல், ஸ்ரீபெரும்புதூர் வரையிலான 23 கி.மீ நீள சாலை விரிவாக்கப் பணிகள் நிறைவடையும் கட்டத்திற்கு வந்து விட்டது.இதில் திருமழிசை பகுதியிலிருந்து, ஸ்ரீபெரும்புதுார் டோல்கேட் வரை ஆறுவழிச் சாலை பணிகள் நிறைவடைந்து ஆறு மாதங்கள் ஆன நிலையில் தற்போது ஆங்காங்கே சாலை சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது. இது வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குறிப்பாக தேசிய நெடுஞ்சாலையில் செட்டிபேடு பகுதியில் சாலை சேதமடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் வாகனங்களில் செல்வோர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கி வருகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பல்லாங்குழியாக மாறியுள்ள நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் மற்றும் செட்டிபேடு பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி