மேலும் செய்திகள்
காலி மனையில் தேங்கும் மழைநீரால் கொசு தொல்லை
1 hour(s) ago
99 குடும்பத்தினருக்கு வீட்டு மனை பட்டா வழங்கல்
1 hour(s) ago
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, செவிலிமேடு, எல்லப்பா நகர் பூங்கா, 2010ல், 15 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டது. எல்லப்பா நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதி மக்கள் இப்பூங்கா பயன்படுத்தி வந்தனர்.ஐந்து ஆண்டுகளாக பூங்காவை மாநகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்கவில்லை. இதனால், பூங்காவிற்கு வருவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. தற்போது, பூங்காவின் ஒரு பகுதியில் மாநகராட்சி வரி வசூல் மையம் இயங்கி வருகிறது.இந்நிலையில், காஞ்சிபுரத்தில் நேற்று முன்தினம் மாலை சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதில், பூங்கா வளாகத்தில் உள்ள 15 ஆண்டு பழமையான பெருங்கொன்றை வகை மரத்தின் கிளை முறிந்து நடைபாதையில் விழுந்தது.இதனால், நடைபயிற்சி மேற்கொள்வோருக்கும், விடுமுறை நாட்களில் விளையாட வரும் சிறுவர்களுக்கும், முறிந்து விழுந்துள்ள மரக்கிளை இடையூறாக உள்ளது.எனவே, முறிந்து விழுந்த மரக்கிளையை அகற்றுவதோடு, பூங்காவையும் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 hour(s) ago
1 hour(s) ago