மேலும் செய்திகள்
வில்வித்தை போட்டியில் வென்ற காஞ்சி மாணவ -- மாணவியர்
14 hour(s) ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி, 9வது வார்டில் கவுன்சிலராக வெற்றி பெற்றார். இவரது சொந்த வார்டான நிமந்தகார ஒற்றைவாடை தெருவில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, நேற்று காலையில், கழிவுநீர் சாலையில் வழிந்தோடியது. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளதாக அப்பகுதியினர் புகார் தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து அப்பகுதிவாசிகள் கூறியதாவது:பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, ஒராண்டிற்கு மேலாக எங்கள் தெருவில் அடிக்கடி சாலையில் கழிவுநீர் வழிந்தோடுவது வாடிக்கையாக உள்ளது. ஒற்றைவாடை தெருவில் வழியும் கழிவுநீர்,பழனி ஆண்டவர் கோவில் சென்று, உபதலைவர் பரமசிவம் தெரு வரை ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது.இவ்வழியாக அமரேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் மடம், பழனி ஆண்டவர் கோவில், குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி சுவாமி கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் கழிவுநீரில் நடந்து செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது.இப்பகுதியில் தொடர்ச்சியாக சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால், காஞ்சிபுரம் மாநகராட்சியில், முன்மாதிரியாக திகழக்கூடிய மேயரின் சொந்த வார்டிலேயே சுகாதார சீர்கேடு ஏற்படும் அவலநிலை உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
14 hour(s) ago